Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மருத்துவமனையில் படுத்த படுக்கையான குஷ்பூவின் புகைப்படம்.. என்னாச்சு என ஷாக்கான திரையுலகம்

இந்த புகைப்படத்தை அவரே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

Actress Kushboo

Actress Kushboo Hospitalised: நடிகை குஷ்பூ என்றாலே எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஒரு நடிகையாகவும் சரி, அரசியல்வாதியாகவும் சரி மீடியாக்களுக்கு எப்போதுமே காரசாரமான கண்டெண்டுகளை கொடுத்துக் கொண்டே இருப்பார். தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போல் வெளியாகியிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை அவரே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

குஷ்பூ முன்னணி நடிகையாக இருந்த பொழுது அவருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருந்தார்கள், அதே அளவுக்கு அவருடைய கருத்துக்களை எதிர்ப்பவர்களும் இருந்தார்கள். சில நேரங்களில் இவர் பேசிய கருத்துகளுக்காக போலீஸ் கைது செய்யும் அளவுக்கு கூட சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. அந்த அளவுக்கு பிரபலமான நடிகை தான் இவர்.

Also Read:உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா.? தவறாக விமர்சித்தவரின் வீட்டுப் பெண்களை வம்புக்கிழுத்த குஷ்பூ

தற்போது பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருக்கும் குஷ்பூ, சில தினங்களுக்கு முன் திமுக கட்சியைச் சார்ந்த பேச்சாளர் ஒருவரின் கருத்துக்களுக்கு பயங்கர எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அவருடைய பேச்சை ஸ்டாலின் கவனம் வரைக்கும் கொண்டு சென்று அந்த பேச்சாளர் திமுக கட்சியில் இருந்து கூட நிரந்தரமாக நீக்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்து ஒரு சில தினங்களில் குஷ்பூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

குஷ்பூவுக்கு என்னதான் ஆச்சு என்று தமிழ் சினிமா ரசிகர்களும் குழம்பி இருந்தார்கள். நடிகை குஷ்பூவுக்கு முதுகு தண்டுவட வால் பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. இதை குஷ்பூவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பல ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கமெண்ட்டுகள் பதிவிட்டு வருகிறார்கள்.

Also Read:என்னை சீண்டி பார்த்தால் தாங்க மாட்டீங்க.. அவதூறாக பேசினால் சும்மா விடமாட்டேன் ஆவேசமாக பேசிய குஷ்பு

சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகை குஷ்பூவுக்கு ஏதோ கட்டி இருந்ததாகவும் அதை ஆபரேஷன் செய்து அகற்றியதாகவும் தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தோடு பகிர்ந்திருந்தார். அதைத்தொடர்ந்து மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது எல்லோருக்குமே கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் தான் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்ப இருப்பதாகவும் அவரே சொல்லி இருக்கிறார்.

மருத்துவமனையில் படுத்த படுக்கையான குஷ்பூவின் புகைப்படம்

Kushboo hospitalised

Kushboo hospitalised

தமிழ் சினிமாவில் கொழுக் மொழுக் நடிகையாக வலம் வந்த குஷ்பூ கொரோனா நேரத்தில் தன்னுடைய உடல் எடையை அப்படியே குறைத்து விட்டார். உடல் எடை குறைத்து இன்னும் இளமையாக இருப்பது போல் பல ரசிகர்களும் குஷ்பூவை வாழ்த்தினார்கள். ஒரு சிலர் குண்டாக இருக்கும் பொழுது தான் அழகாக இருந்தீர்கள் என்று கூட கமெண்ட் செய்து வந்தார்கள். இந்நிலையில் தற்போது இவருக்கு தண்டுவட வால் பகுதியில் எதனால் அறுவை சிகிச்சை நடந்தது என்ற மருத்துவ காரணம் சரியாக தெரியவில்லை.

Also Read:30 ஆண்டுகளுக்கு முன்பு டாப் 10 நடிகைகள் வாங்கிய சம்பளம்.. குஷ்புவை விட ஆறு மடங்கு ஜாஸ்திய வாங்கிய விஜயசாந்தி

Continue Reading
To Top