Connect with us

Cinemapettai

உங்கொ** தான் கூத்தாடி.. ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குஷ்பூ.. என்ன கருமம்டா இது

kushboo

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உங்கொ** தான் கூத்தாடி.. ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குஷ்பூ.. என்ன கருமம்டா இது

நடிகை குஷ்பு எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அதே போல் ஏதேனும் ரசிகர் தரக்குறைவாக பேசி விட்டால் பதிலடி கொடுப்பதற்கு தயங்காதவர். நடிகை எல்லாத்தையும் பொருத்துக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை எனவும் ஒரு சில இடங்களில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் நாடு முழுவதும் தற்போது குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்து வருகின்றது. போலீசாரும் தடியடியில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்டிக்கும் வகையில் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரையும் நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் கூறியதாவது, குடியுரிமைச் சட்டம் நாட்டிற்கே கேடு தரக்கூடியது என்றும், இதனால் இந்தியாவுக்கே அழிவு என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மதச்சார்பின்மையை முன்னெடுத்திருந்த இந்தியாவில் மதம் சார்பாக எதையும் தூண்ட வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு நடிகை கஸ்தூரி குஷ்புவை தாக்கிப் பேசியுள்ளார். கூடவே ஒரு ரசிகரும் குஷ்புவை உங்க அம்மா கூத்தாடி தான் என்றும், வட இந்தியாவில் உங்களுக்கு என ஒரு இடம் இருக்கிறது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த குஷ்பு, உங்கொ** கூத்தாடி தான் என்று கூறியதற்கு நன்றி எனவும், நாட்டிற்காக பேச வேண்டுமே தவிர தனிப்பட்ட கருத்துக்களை இங்கே இடமில்லை எனவும் பதிலடி கொடுத்துள்ளார்.

இருந்தாலும் குஷ்பு அடிக்கடி உங்கொ** சர்ச்சையில் சிக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட குஷ்பு உங்க அம்மா என்ன flipkart’ஆ எனக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடும் அறிந்ததே.

குஷ்பு தற்போது ரஜினிகாந்துடன் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top