கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நடிகை குஷ்பு திமுகவுக்கு ஆதரவாக தென்மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஈடுபட்ட தேர்தல் பிரச்சாரத்தில்  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பி.சி.பட்டி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய 3 காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தலா ஒரு கிரிமினல் வழக்கு நடிகை குஷ்பூ மீது பதிவு செய்யப்பட்டது.

அதிகம் படித்தவை:  2.0 உடன் ஒப்பிட்டால் எந்திரன் வெறும் டீஸர் தான் ! 2.0 (VFX Featurette) மேக்கிங் வீடியோ உள்ளே !

இது தொடர்பான வழக்கில் தான் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல வேண்டி உள்ளதால் வெளிநாடு செல்ல அனுமதிக்க கோரி நடிகை குஷ்பு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்னதாக மனுதாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நடிகை குஷ்புவின் கோரிக்கையை ஏற்று, அவர் வெளிநாடு செல்ல அவருக்கு அனுமதி வழங்கி  உத்தரவிட்டுள்ளது.