fbpx
Connect with us

Cinemapettai

தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ

Videos | வீடியோக்கள்

தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் விரைவில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். தனது அழகாலும் திறமையான நடிப்பாலும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தவர். ரஜினிமுருகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். அந்த வகையில் முன்னாள் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்த மகாநதி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை கீர்த்தி சுரேஷ் டெல்லியில் தேசிய விருதை பெற்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விரைவில் அவர் நடிப்பில் பென்குயின் என்ற படம் வெளியாக இருக்கிறது. மேலும் பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

வாழ்த்துக்கள் கீர்த்தி சுரேஷ்.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top