Connect with us

Cinemapettai

ரஜினிகாந்துடன் கீர்த்தி சுரேஷ் எந்த கேரக்டரில் நடிக்கிறார் தெரியுமா? என்ன சிவா சார் இதெல்லாம்!

rajini-keerthy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினிகாந்துடன் கீர்த்தி சுரேஷ் எந்த கேரக்டரில் நடிக்கிறார் தெரியுமா? என்ன சிவா சார் இதெல்லாம்!

ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவதால் சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற செய்தி சில காலமாக ஊடுருவிக் கொண்டு வந்தது. ஆனால் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை படம் ரிலீஸ் செய்து அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்.

இதனால் ரஜினி அரசியலுக்கு வருவது சாத்தியமில்லை எனவும் சிலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ரஜினி தனது அடுத்த படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு போன்ற ரஜினிகாந்தின் பழைய ஜோடிகளை சேர்த்துள்ளார் சிவா.

மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு இரண்டு மனைவி என்ற செய்தியும் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. இந்நிலையில் இளம் நாயகி கீர்த்தி சுரேஷும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். இதனால் ரஜினிக்கு இரட்டை வேடம் என்றும் கீர்த்தி சுரேஷ் மகன் ரஜினியின் ஜோடி எனவும் செய்திகள் உலா வந்தது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள செய்திப்படி கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் காமெடி நடிகர்கள் சதீஷ், சூரி போன்றோரும் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கும் இந்த படத்தை அடுத்த தீபாவளிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

தங்கச்சி?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top