Connect with us

Cinemapettai

கதையெல்லாம் முக்கியமில்ல.. காசுதான் முக்கியம்.. அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் ஆக ஸ்கெட்ச் போடும் கீர்த்தி சுரேஷ்

keerthi-suresh

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கதையெல்லாம் முக்கியமில்ல.. காசுதான் முக்கியம்.. அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் ஆக ஸ்கெட்ச் போடும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷின் தற்போதைய அதிரடி முடிவால் ஆட்டம் கண்டுள்ளது தமிழ் சினிமா. ஒரு கட்டத்திற்கு பிறகு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிப்பதாக சபதம் எடுத்தார். அந்த வகையில் வெளிவந்து ஹிட்டடித்த படம் மகாநதி.

அதன் பிறகு இனி மசாலா படங்களில் நடிக்கப் போவதில்லை எனவும் முடிவு செய்திருந்தார். ஆனால் இடையில் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷின் உருவத் தோற்றத்தை கேலி செய்து மீம்ஸ் போட ஆரம்பித்தனர். இதனால் சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொண்டு தனது உடல் எடையை குறைத்து விட்டார்.

keerthi-suresh-now

keerthi-suresh-now

இப்பொழுது அவர்களின் ரசிகர்கள் குண்டா இருந்தப்பவே நல்லா இருந்தீங்க என்று அப்படியே ப்ளேட்டை மாற்றி விட்டனர். இதனால் அப்படி இருந்தா இப்படிங்கறாங்க, இப்படி இருந்தா அப்படிங்கறாங்க என புலம்பிக் கொண்டிருக்கிறார்.

keerthi-suresh-before

keerthi-suresh-before

தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை விட காசுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க முடிவு செய்துவிட்டாராம். இதற்காக மணிரத்தினம் படத்தில் நடிக்க 8 மாதம் ஒதுக்க வேண்டி இருந்தது.

ஆனால் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு வர, இது வேலைக்காகாது என ரூட்டை மாற்றி விட்டாராம். தற்போது தலைவர் 168 என்ற படத்தில் ரஜினியுடன் நடிக்க இருக்கிறார்.

மேலும் கீர்த்திக்கு ஹிந்தி பக்கம் செல்லும் யோசனை கூட உள்ளதாம். இதனால் மார்க்கெட் உள்ளபோதே மச்சு வீடு வாங்கி வீடு என்பதைப்போல தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top