உலகின் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் திறந்து வைத்தார்.

உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மெழுகு சிலைகளில் கிடைக்கும் துல்லியத்தைவிட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் உயிரோட்டமும் கிடைக்கும். உலகின் முதன் சிலிகான் சிலை அருங்காட்சியகம் சென்னையில் உள்ள விஜிபி.,யில் அமைந்துள்ளது பெருமைக்குரியது.

இந்த அருங்காட்சியகத்தில் அன்னை தெரசா, அமிதாப் பச்சன், தோனி, ஜாக்கி சான், அர்னால்டு, சாய்பாபா, சார்லி சாப்ளின், மோனாலிசா, மைக்கேல் ஜாக்சன் போன்ற பல பிரபலங்களை வைக்க முடிவெடுத்தனர். அதற்கென நிறைய நுணுக்கமான விஷயங்களை சேகரித்து, விவாதித்து ஆராய்ந்து சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.

விஜிபி ஸ்னோ கிங்டம் உள்ளே அமைந்துள்ள இந்த சிலிக்கான் சிலை அருங்காட்சியகத்தை, நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் குத்துவிளக்கு ‘ஏற்றி’ துவக்கி வைத்தார்.

விழாவில் கீர்த்தி சுரேஷ் பேசுகையில், ‘ஸ்ரீதர் சார் மிகப்பெரிய திறமைசாலி. எந்த ஆர்ட் கேலரி போனாலும் ஸ்ரீதர் சார் வரைந்த ஓவியங்கள் இல்லாமல் இருக்காது. ஸ்ரீதர் சார் என்கிட்ட இந்த சிலிக்கான் ஐடியா பற்றி சொல்றப்பவே ரொம்ப பிடிச்சிருந்தது. இந்த சிலிக்கான் சிலை மியூசியம் ரொம்ப லைவ்வான அழகோட இருக்கு. இதை துவக்கி வைக்க என்னை அழைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசம்” என்றார்.