Tamil Cinema News | சினிமா செய்திகள்
பள்ளியிலேயே கில்லியாக கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படம்
மலையாள வாசனை எப்போதுமே தமிழ் சினிமாவில் அதிகமாக வீசிக் கொண்டுதான் இருக்கும். அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த நாயகிகளில் முக்கால்வாசி கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் தான்.
அப்படியொரு இறக்குமதியாக வந்து சேர்ந்தவர் தான் கீர்த்தி சுரேஷ். சினிமா வாரிசுகளில் ஒருவரான இவர், தமிழில் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் அறிமுகமானார். என் செல்லக்குட்டி உன்னக் காண என்ற பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் குத்தகைக்கு எடுத்து சென்றுவிட்டார்.
பிறகு படிப்படியாக முன்னுக்கு வராமல் ஒரேடியாக டாப் கியரில் சென்ற கீர்த்தி சுரேஷ், முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து விட்டார். தெலுங்கு சினிமாவிலும் இவரது புகழ் ஓங்கிய நிலையில்தான் உள்ளது.
பழம்பெரும் நாயகியை சாவித்திரியின் கேரக்டரில் நடிப்பு முத்திரையை ஓங்கி குத்தினார். இதனால் அக்கட தேசமும் அவுட். தற்போது பாலிவுட் வரை சென்று உள்ள கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
புகைப்படம் :

keerthi-suresh-childhood
