Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் தல ரசிகர்களுடன் மோதும் கஸ்தூரி.. ட்விட்டரில் ரணகளம்
நடிகை கஸ்தூரியை கண்டாலே சில தல ரசிகர்களுக்கு ஏன் சில சினிமா ரசிகர்களுக்கு கடும் வெறுப்பாக உள்ளது. அவர் சமூக கருத்துக்களை சொல்லும் அளவுக்கு நடத்தையில் செய்வதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை எப்போதும் முன்வைத்து வருகின்றன.
சமீபகாலமாக நடிகை கஸ்தூரி மற்றும் சில தல ரசிகர்கள் டுவிட்டரில் அடிக்கடி சண்டை போட்டு வருகின்றனர். நடிகை கஸ்தூரி வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் அடிக்கடி ஏதாவது கருத்து சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தல ரசிகர்களை வெறுப்பேற்றும் விதமாக தல அஜித்தின் சக போட்டியாளராக கருதப்படும் தளபதி விஜய்யை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால், சால்ட் அண்ட் பெப்பர் லுக் என்றால் அது தளபதி விஜய்க்கு மட்டுமே பொருத்தமாக உள்ளது. மேலும் அந்த லுக் பிரத்யேகமாக உள்ளது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தளபதி விஜய், அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் ராயப்பன் என்ற கேரக்டரில் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Salt and Pepper has a new face. 😍 #Rayappan #Thalapathy #vijay #CinematicEpicBigilTrailer #Verithanam #BigilTrailer pic.twitter.com/gtlHg2R8JH
— Kasturi Shankar (@KasthuriShankar) October 13, 2019
இதனை கண்ட தல ரசிகர்கள் பெரும் கோபத்தில் கஸ்தூரியின் இந்தப் பதிவுக்கு காட்டமாக பதில் அளித்து வருகின்றனர்.
