Tamil Cinema News | சினிமா செய்திகள்
யாரை கேட்டு அந்த நாலு பேரை சுட்டீங்க.. உங்களுக்கு தண்டனை கொடுக்கணும்.. பொடி வைத்துப் பேசிய கஸ்தூரி
சமீபகாலமாக நடிகை கஸ்தூரி சர்ச்சையான மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதில் சில பதிவுகள் ரசிகர்களை கவரும், சில பதிவுகள் ரசிகர்களை வெறுப்படைய வைத்தது.
அந்த வகையில் தற்போது தெலுங்கானாவில் பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவரை 4 பேர் கடத்தி கற்பழித்து எரித்துக் கொன்ற சம்பவம் பற்றி சர்ச்சை உடன் கலந்து நல்ல விஷயத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் கூறுவதாவது, ஹைதராபாத் பிரியங்கா ரெட்டி வழக்கில் கைதான 4 பேரையும் சுட்டு தள்ளிய போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட உன்னாவ் என்ற அதிகாரியை உடனடியாக பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் எனவும் வித்தியாசமான தண்டனையை கொடுக்க சொல்லி ட்வீட் செய்துள்ளார்.
இவருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் தமிழ்நாடு போலீசார் வெளியில் விட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் #DishaCase குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் சட்டத்தின் முன் நிறுத்தாமல் என்கவுண்டர் போட்டு தள்ளிய போலீஸ் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். உன்னாவ், பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
#PriyankaReddyCase #VCSajjanar #PrakashReddy
— Kasturi Shankar (@KasthuriShankar) December 6, 2019
