fbpx
Connect with us

Cinemapettai

ரசிகர்களிடம் வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொண்ட கஸ்தூரி.. அஜித்திடம் அடைக்கலம் தேடுகிறாரா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரசிகர்களிடம் வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொண்ட கஸ்தூரி.. அஜித்திடம் அடைக்கலம் தேடுகிறாரா?

மற்ற சினிமா ரசிகர்களை காட்டிலும் தமிழ் சினிமாவில் சமூக வலைதளங்களில் நடிகர் நடிகைகளை ஆபாசமாக பேசும் பழக்கங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. நடிகர் சண்டைகளில் ஆரம்பித்து தற்போது ஒரு படி மேலே சென்று நேரடியாக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது என எல்லை மீறிவிட்டது.

சமீபத்தில் தல அஜித்தின் ரசிகர்கள் சிலர் நடிகை கஸ்தூரி உடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு ஆபாசமாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தனர். அதற்கு கஸ்தூரியும் மிகக் காட்டமாக கெட்டவார்த்தை பேசி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் மேலும் கோபமடைந்த தல ரசிகர்கள் #DirtyKasturiAunty என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரென்ட் செய்தனர். அதற்கு கஸ்தூரியும் பதிலடி கொடுக்கும் வகையில் அவரும் #dirtyAjithFans என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி தல ரசிகர்களிடம் தன்னுடைய கோபத்தை கொட்டித் தீர்த்தார்.

இருந்தும் கோபத்தின் எல்லைக்கே சென்ற ரசிகர்கள் தொடர்ந்து கஸ்தூரி ஆபாசமான கதாபாத்திரங்களில் நடித்ததை எல்லாம் ஒப்பிட்டு மிகவும் கேவலமாகவும் தரக்குறைவாகவும் கஸ்தூரியை அசிங்கப்படுத்தினர். கஸ்தூரியும் என்ன செய்வது என்று தெரியாமல் இறுதியில் தல அஜீத் மற்றும் அவரது மனைவி ஷாலினியிடம் முறையிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, தயவுசெய்து இப்பவாவது தன்னுடைய ரசிகர்களை கட்டுப்படுத்த மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக தல அஜித்திடம் முறையிட்டார் கஸ்தூரி. இணையதளங்களில் அத்துமீறும் தனது ரசிகர்களை இனிமேலும் தல அஜித் கண்டிப்பாரா அல்லது வழக்கம்போல் அமைதியாக இதனை கடந்து செல்வாரா என பார்போம்.

ஒரு சிலர் செய்யுற தப்பாலதான் மொத்த ரசிகர்களுக்கும் கெட்ட பேரு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top