Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகை கஸ்தூரியை ட்விட்டரில் கேவலமாக பேசிய நபர், கொதித்து எழுந்த கஸ்தூரி.!

நடிகை கஸ்துரி சமீபகாலமாக வெளிப்படியாக சினிமா, அரசியல் என பல்வேறு சமூக கருத்துகளை பற்றி ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

அந்தநிலையில் கஸ்தூரிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பதிவு செய்த நபர் நடிகை கஸ்தூரியிடம் ட்விட்டரில் அசிங்கமான கேள்வியை கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கஸ்தூரி தன்னை அசிங்கமாக திட்டிய நபருக்கு பதிலடி தரும் விதமாக, ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

kasturi

கஸ்தூரி ட்விட் செய்ததை பார்த்த ரசிகர் ஒருவர் கஸ்தூரியிடம் உங்கள துணிவான பெண்மணி என மதிக்கும் ஆண்மகன் நான். இருந்தாலும் இது போன்ற வார்த்தைகள் வேண்டாமே தோழி என்று கேட்டுக்கொண்டார்.

அந்த நபருக்கு பதிலளித்த கஸ்தூரி ஆயிரம் ஏச்சு வருது… இக்னோர் பண்ணுறேன். ஏதாவது ஒன்னு ரெண்டுக்கு என்னையும் அடக்கமாட்டாம ரியாக்ட் பண்ணிடுறேன். மனசுல பட்டதை சொல்லியே பழக்கப்பட்டுட்டேன், இனி இன்னும் பொறுமையாக இருக்க முயல்கிறேன் என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top