Connect with us
Cinemapettai

Cinemapettai

பெண்களை மட்டமாக வர்ணிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி.. ஆன்ட்டி நடிகை காட்டம்

biggboss-kasthuri

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பெண்களை மட்டமாக வர்ணிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி.. ஆன்ட்டி நடிகை காட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வி ஆர் த பாய்ஸ் என்று அதில் கலந்து கொண்ட ஆண் போட்டியாளர்கள் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பாடியதாக சமீபகாலமாக பேச்சு அடிபட்டு வருகிறது.

இந்நிலையில் விஜய் டி.வி தனது ப்ரோமோவில் தர்ஷன், சாண்டி, முகன் மற்றும் கவின் ஆகியோர் பாடிய இந்த பாடலை தொடர்ந்து பிரமோட் செய்து வருகிறது.இந்நிலையில் இந்த பிரோமோவை பற்றி நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் விளாசித் தள்ளியுள்ளார்.

அவர் கூறியதாவது :

நாங்க ஆம்பளைங்க ஆம்பளைங்க ஏன் கூவிட்டு இருக்கீங்க. பெண்கள் நா அவ்வளவு கேவலமா போச்சா. இது விஜய் டி.வியின் கேவலமான செயலாக உள்ளது. மேலும் மட்டமான வியாபார தன்மையாகவும் உள்ளது. விஜய் டி.வியின் ரசனை மிகவும் கீழ்தரமாக செயல்பட்டு வருகிறது எனவும் அந்த ட்விட்டரில் கிழித்து தொங்க விட்டிருக்கிறார். ஆனால் இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதை மறந்துவிட்டார் போலும்.

மேலும் தூத்துக்குடி அருகில் உள்ள ஒரு கல்லூரியில் பெண்களுக்கான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் மேலும் அதற்காக தனி நிதி ஒதுக்கி செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top