Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகை நளினியை தவறாக பேசிய கார்த்தி. கடுப்பில் கோலிவுட்டினர்

நடிகை நளினியை காமெடி என்ற பெயரில் தவறாக பேசிய கார்த்திக்கால் ரசிகர்கள் செம கடுப்பில் இருப்பதாக தெரிகிறது. எண்பதுகளின் இறுதியில் உச்சத்தில் இருந்தவர் நடிகர் ராமராஜன். முதலில் உதவி இயக்குனராகவும் மற்றும் இயக்குனராகவும் இருந்து பிறகு முழுநேர நடிகரானார். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் ஒரு திரையரங்கில் ஒரு வருடம் ஓடி சாதனைப் படைத்தது.
எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து, வில்லுபாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு போன்ற பல திரைப்படங்கள் இவரின் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்தது. இவர் தன் சக நடிகை நளினியை 1987ம் ஆண்டு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் மன கசப்பு ஏற்பட்டு முறையாக விவகாரத்து பெற்று பிரிந்தனர். இருந்தும், இன்று வரை இருவரும் வேறு திருமணம் செய்து கொள்ளாமலே நல்ல நட்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமேசான் ப்ரைமில் பிளட் சட்னி என்ற காமெடி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட நடிகர் கார்த்திக் குமார் காமெடி என்ற பெயரில் பேசிய பேச்சுகள் சமூக வலைத்தளத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராமராஜன் கண்டிப்பாக ஒரு பசுமாட்டை வைத்திருப்பார் என்றும், ஆனால் நான் அவரின் மனைவி நளினியை குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்தார். இது சமூக வலைத்தளத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கார்த்திக் குமார் மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கும், மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துக்கும் மின்னஞ்சல் மூலம் புகாரை ஜெனிபர் ஜேக்கப் என்பவர் தாக்கல் செய்துள்ளார். இவர் சுசி லீக்ஸ் புகழ் சுசித்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
