கரீனா கபூர் கர்ப்பமா இருக்காங்களா இல்லையாங்குற கவலை அவுங்கள பெத்தவங்களைவிட பத்திரிகைகாரங்களுக்குத்தான் அதிகமா இருக்கு.

ஏற்கனவே கர்ப்பமா இருந்த போது அவுங்களை கேள்வி கேட்டு டார்ச்சர் செஞ்சு கரீனா மெரீனால குதிச்சுறலாமானு யோசிக்கிற அளவுக்கு கொண்டு போய்விட்டாங்க, போதாத குறைக்கு அவுங்க கர்ப்பமா இருக்குற புகைப்படத்தை அனுமதி இல்லாமல் வெளியிட்டு வாங்கிகட்டிகிடாங்க…

இப்போ கதை என்னான்னா பத்திரிக்கையாளர்கள் திரும்ப கரீனாகிட்ட “நீங்க அடுத்த குழந்தை எப்போ பெத்துக்கலாம்னு இருக்கீங்க? இப்போ கர்ப்பமா இருக்கீங்களா?”னு கேட்ருக்காங்க,

இத கேட்டு டென்ஷன் ஆன கரீனா “நான் முன்ன கர்ப்பமா இருந்தபோது ரொம்ப சந்தோசமா இருந்தேன், அந்த நினைவுகள் எனக்கு எப்பவுமே சந்தோசத்தை கொடுக்கும். ஆனா இப்போ நான் கர்ப்பமா இல்லை, தயவு செஞ்சு அதையே என்னிடம் திரும்ப திரும்ப கேட்காதிங்க”னு புலம்பி தள்ளிருக்காங்கலாம் பாவம்.