புதன்கிழமை, மார்ச் 19, 2025

துரியோதனனாக நடிக்க வேண்டியவர் ராமராக நடிக்கிறாரா.? சர்ச்சையை கிளப்பிய கங்கனா காந்தி

Actress Kangana Ranaut: கங்கனா ரனாவத் மிகவும் துணிச்சலான நடிகை என்ற பெயரைப் பெற்று இருக்கிறார். இதற்கு இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரம் மட்டுமல்ல, பாலிவுட்டில் உள்ள பிரபலங்களின் மீது வெளிப்படையாகவே பல குற்றச்சாட்டுகளை அடுக்கி சர்ச்சையை கிளப்பி உள்ளார். இப்போது பிரபல பாலிவுட் நடிகரை மறைமுகமாக கடுமையாக சாடி உள்ளார்.

காந்தியவாதி போல் பேசும் கங்கனா ரன்வீர் சிங்கை வம்புக்கு இழுத்துள்ளார். அதாவது ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார். சீதையாக ஆலியா பட் நடிக்கவிருக்கிறார். இது குறித்து கங்கனா தனது சமூக வலைதள பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

Also Read : D50 படத்திற்கு கொழுக்கு மொழுக்கு நடிகையை லாக் செய்த தனுஷ்.. திரிஷா, கங்கனாவை ஓரம் கட்டிய ஹீரோயின்

அதாவது சினிமாவில் உள்ளவர்களைப் பற்றி மோசமாக பேசியே பிரபலமாகிய ஒருவர் மது, மாது என எந்நேரமும் இருக்கக்கூடியவர். இப்படி போதைக்கு அடிமையான ஒருவர் ஒழுக்கயின்மைக்கு பேர் போன ராமராக நடிக்க கூடாது என கங்கனா குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி அவருடைய குணம் மிகவும் மோசமானது என்பதால் துரியோதனன், சகுனி போன்ற கதாபாத்திரங்களில் தான் அவர் நடிக்க வேண்டும் என்று விமர்சித்திருக்கிறார். இப்போது கங்கனாவின் இந்த பதிவு இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

Also Read : பொன்னியின் செல்வனை மிஞ்சிய கெட்டப்பில் கங்கனா ரனாவத்.. சந்திரமுகியாக வாங்கிய சம்பளம்

மேலும் இயக்குனர் கரண் ஜோஹர் பற்றியும் மறைமுகமாக விமர்சித்திருந்தார். அதாவது வாரிசு நடிகர்களுக்கு தான் பாலிவுட்டில் அதிகமாக வாய்ப்பு கொடுப்பதாக கங்கனா கூறி வருகிறார். அதுமட்டுமின்றி சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்தில் கூட இவர்களின் பெயரை நேரடியாகவே பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்போது போட்ட கங்கனா பதிவிற்கு ரசிகர்கள் ஒருபுறம் ஆதரவும் மறுபுறம் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பாலிவுட்டில் மிகப்பெரிய பிரளயமே வெடித்துள்ளது. கங்கனாவுக்கு எதிராக ரன்பீர் கபூர் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

Also Read : சூட்டிங் ஸ்பாட்டில் 30 பேருடன் கங்கனா அட்டூழியம்.. அல்லோலப்படும் சந்திரமுகி 2 படப்பிடிப்பு

Advertisement Amazon Prime Banner

Trending News