Tamil Cinema News | சினிமா செய்திகள்
கணவனால் கைவிடப்பட்டு அனாதையான முன்னாள் நடிகை.. ஆளே மாறிப் போன அவரின் தற்போதைய நிலை
கரகாட்டக்காரன் படத்தின் மூலம் அறிமுகமாகி அன்றைய இளைஞர்களின் மனதில் கரகாட்டம் ஆடிய ஹீரோயின் கனகா. பிரபல நடிகை தேவியின் மகளான இவர், சினிமா பின்புலம் இருந்ததால் எளிமையாக வாய்ப்புப் பெற்றவர்.
இவரின் முதல் படமாக 1989 ஆம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழகத்தில் 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதில் ராமராஜனுடன் கவுண்டமணி செந்தில் காமெடி வெகு பிரபலம்.
அதன் பிறகு முன்னணி நாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்த கனகா, பின்னர் திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார். திருமணமான சில நாட்களிலேயே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.
தற்போது அனாதையாக கேரளாவில் உள்ள ஹோம் ஒன்றில் சேர்ந்து புற்றுநோய் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. கனகா வீட்டில் இருக்கும் போதும் தனியாக இருப்பதற்கு பயந்ததாகவும், தன்னுடைய சொத்துக்களை யாரேனும் பறித்து விடுவார்கள் என்றும் கவலை பட்டதாக தெரிகிறது.
கடவுள்தான் காப்பாத்தனும்.!

kanaka
