Actress Kanaga: முத்து முத்து கண்ணால நான் சுத்தி வந்தேன் பின்னால ,இந்த யாருமே சொந்தக்காரி நடிகை கனகா தான். கண்ணழகி என்றால் நடிகை மீனாவை சொல்வார்கள். ஆனால் அவருக்கு முன்பே தமிழ் சினிமா ரசிகர்களே தன் கண்ணழகால் கட்டிப் போட்டவர் தான் நடிகை கனகா.
ராமராஜனுடன் இணைந்து இவர் நடித்த கரகாட்டக்காரன் படம் இவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அது மட்டும் இல்லாமல் அப்போதைய தமிழ் சினிமா ரசிகர்கள் கனகா மீது பித்து பிடித்து சுற்றினார்கள் என்று கூட சொல்லலாம்.
ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், பிரபு என அடுத்த டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட நடித்த கனகா அதன் பின்னர் திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார் இந்த கண்ணழகு நடிகை கனகா. அதன் பின்னர் கனகா என்ன ஆனார் என்று எதுவுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியாது.
அப்படி இருக்கும் சமயத்தில் திடீரென நடிகை கனகா இறந்து விட்டார் என்ற செய்தி வெளியானது. அந்த சமயத்தில் வீட்டு வெளியில் குழுமி இருந்த கூட்டத்திற்கு முன் வந்து நின்று நடிகை கனகா நான் இறந்து போகவில்லை நன்றாக தான் இருக்கிறேன் என சொன்னார்.
கனகா உயிரோடு இருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் கனகாவின் நிலைமையை பார்த்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவும் அதிர்ச்சியாக இருந்தது. தன்னுடைய அழகு மொத்தத்தையும் இழந்து கனகாவா இவர் என்பது போல் இருந்தார்.
கனகாவுக்கு இதை பண்ணிருக்க கூடாது
அப்போது ஒரு சில சேனல்களில் இவர் பேட்டியும் கொடுத்திருந்தார். அப்போதுதான் கனகாவிற்கு வாழ்க்கையில் ஏதோ ஒரு சொந்த பிரச்சனை இருக்கிறது அவர் தனிமையாக வாழ்ந்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியவந்தது.
அதன்பின்னர் சில வருடங்களுக்குப் பிறகு கனகா தங்கியிருந்த வீட்டிலிருந்து திடீரென புகைமூட்டம் கிளம்பியது. அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு புகார் அளித்தும் கனகா வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
பின்னர் காவல் துறையினர் வந்த பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த கனகா ரொம்பவும் கோபமாக எல்லோரிடமும் பேசினார். அப்போதுதான் கனகாவுக்கு மனநிலை சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பதாக பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
கனகாவின் இந்த நிலைக்கு பலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர். அவரை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் கங்கை அமரன் ரொம்பவே மனம் ஒடிந்து அவரைப் பற்றி பேசியிருந்தார். கனகா நிலை இதுதான், அவர் இப்போது இப்படித்தான் இருக்கிறார் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெட்ட வெளிச்சமான விஷயம் ஆகிவிட்டது.
இருந்தாலும் தன்னை வெளி உலகத்திற்கு காட்டாமல் வாழ்ந்து வந்தார். அப்படி இருக்கும் பட்சத்தில் சில நாட்களுக்கு முன்பு ரசிகர் ஒருவருடன் கனகா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.
புகைப்படம் எடுத்துக்கொண்ட வரை பற்றி விசாரிக்கும் பொழுது தான் கனகாவின் இன்னொரு பக்கம் தெரிய வந்தது. அதாவது கனகாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டவர் அவருடைய ரசிகர் இல்லை, நெருங்கிய நண்பர் பாலாஜி.
முதன்முறையாக கனகா இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியான போது பாலாஜி கனகாவின் வீட்டுக்கு சென்று சுவர் ஏரி குதித்து வாசலில் நின்று கனகாவை அழைத்து உன்னை பற்றி தவறான செய்திகள் வெளியில் பரவிக் கொண்டிருக்கிறது, தயவுசெய்து வெளியே வா என்று கூப்பிட்டாராம்.
அதன் பின்னர் தான் கனகா வீட்டை விட்டு வெளியே வந்து தான் நன்றாக இருப்பதை சொல்லி இருக்கிறார். இதைத்தொடர்ந்து கனகாவை தன்னுடைய சேனலில் பேட்டி எடுத்திருக்கிறார்.
அப்போது உங்களுக்கு மனநிலை சரியில்லை என்று எல்லோரும் சொல்கிறார்களே ஏன் எனக் கேட்ட போது, நான் இப்போது சிகப்பு நிற புடவை அணிந்து இருக்கிறேன். அதற்கு ஏற்ற மாதிரி வளையல், கம்மல் எல்லாமே போட்டு இருக்கிறேன்.
நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதிலை கொடுக்கிறேன், மனநிலை சரியில்லாதவர்கள் இப்படி செய்வார்களா என கனகா கேட்டிருக்கிறார். சமீபத்தில் கனகாவும், பாலாஜியும் மாலுக்கு சென்ற போது எடுத்தப்பட்ட புகைப்படம் தான் இது.
இதைப்பற்றி பாலாஜி கூறுகையில் எதற்காக இந்த படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தேன் என்று தெரியவில்லை. கனகா இப்போது அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இனி கனகாவை அடையாளம் கண்டு அவரிடம் புகைப்படம் எடுக்கிறேன், பேசுகிறேன் என தொந்தரவு செய்ய வாய்ப்பிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் கனகாவின் இந்த தோற்றத்தை அவருடைய ரசிகர்கள் பார்ப்பது அவருக்கே கொஞ்சம் வருத்தமான விஷயம் தான். இதை நான் செய்திருக்க கூடாது என தெரிவித்திருக்கிறார்.
- நம்ம கரகாட்டக்காரன் கனகாவா இது?
- கங்கை அமரனை வெறுத்து ஒதுக்கிய கனகா
- கனகாவை துரத்தி துரத்தி காதலித்த நடிகரின் மகனுக்கு ஏற்பட்ட கொடுமை