Tamil Cinema News | சினிமா செய்திகள்
தத்து குழந்தை ஏற்பாடு செய்து தர முடியுமா? முன்னணி நடிகரிடம் கோரிக்கை வைத்த காஜோல்
எனக்கு ஒரு குழந்தை கொடுங்கள் என சாண்டியின் முன்னாள் மனைவி கஜோல் பிரபல நடன இயக்குனர் ராகவா லாரன்ஸிடம் முறையிட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.
சமீபத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித்தின் குடும்பத்தினரை ஒரு குழந்தையை தத்தெடுத்து அதற்கு சுஜித் என பெயரிட்டு வளர்த்து வருமாறும், அதற்கான முழு செலவையும் நானே ஏற்றுக் கொள்வதாகவும் ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார்.
இந்த கருத்து தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் லாரன்ஸ் மீது பெரிய மரியாதையையும் உண்டாக்கியது.
இதன்பிறகு சாண்டியின் முன்னாள் மனைவி கஜோல், தான் குழந்தை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் மேலும் குழந்தை வளர்க்க ஆசையாக இருப்பதாகவும் கூறிய அவர், லாரன்ஸிடம் தனக்கு ஒரு குழந்தையை தத்து எடுத்து தருமாறு முறையிட்டுள்ளார்.
அந்தக் குழந்தையை வளர்ப்பது என் பொறுப்பு எனவும் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் கஜோலை பாராட்டி வருகின்றனர்.
