Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் கேரியரில் மோசமான படம்னா அது குஷி தான்.. விஜய் ரசிகர்களை கோபப்படுத்திய ஜோதிகா
தமிழ்சினிமாவில் வசூல் வேட்டையாடிய பல படங்களில் குஷி படமும் ஒன்று. விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் 2000ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். எளிமையான காதல் கதை இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஜோதிகாவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த குஷி படத்தை மோசமான படம் என ஜோதிகா கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சொல்லப்போனால் விஜய் மற்றும் ஜோதிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்த திரைப்படம் குஷி தான்.
ஜோதிகாவுக்கு ஓவர் ஆக்டிங் என்று பெயர் கொடுத்த திரைப்படம் குஷி. இருந்தும் அந்த கதாபாத்திரத்தை ரசிக்காத ஆட்களே இல்லை. இன்றும் கே டிவி-யில் அந்த படத்தை பார்ப்பவர்கள் கூட்டம் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அப்பேர்ப்பட்ட பெயர் வாங்கிக் கொடுத்த விஷயத்தை நான் நடித்ததிலேயே மோசமான படம் என்று கூறியது தளபதி ரசிகர்களிடையே மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மெர்சல் படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஜோதிகாவை அழைத்ததும், ஆனால் வேண்டுமென்றே ஜோதிகா நிராகரித்து விட்டார் என அப்போது செய்திகள் வெளிவந்தன.
அதை உண்மையாக்கும் விதமாக ராட்சசி பட இயக்குனர் குஷி படம் ஜோதிகாவுக்கு மோசமான படம் என்று கூறும் ஜோதிகா கூறியதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே சூர்யாவுக்கும் விஜய்க்கும் தனிப்பட்ட விரோதம் இருப்பதாக பலர் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஜோதிகா இப்படிக் கூறியிருப்பதாக இயக்குனர் கூறியது கண்டிப்பாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தும் சூர்யாவும் விஜய்யும் நல்ல நண்பர்கள் என்பது நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயமாக இருக்கிறது.