பொறுப்பாக நடந்து கொள்ளுகள்! கேவலப்படுத்தாதீர்கள்! நடிகை ஜோதிகா ஆவேசம்!
ஜோதிகா, ஊர்வசி, பாணுப்பிரியா, உள்பட பலர் நடித்துள்ள மகளிர் மட்டும் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
விழாவில் நடிகை ஜோதிகா பேசுகையில், நான் இந்த நிலைக்கு வந்ததற்கு காரணம் சிவகுமார் குடும்பத்தினர் தான். அந்த குடும்பத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.
ஒரு குடும்பத்தில் பெண்களை எப்படி நடத்த வேண்டும். ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக எனது கணவர் குடும்பத்தினர் விளங்குகிறர்கள்.
அன்பு, பாசம். கண்டிப்பு, மரியாதை என அனைத்தையும் எங்களது குடும்பத்தில் காணலாம்.
சினிமாவில் கதாநாயகிகளை கேவலமாக சித்தரிப்பதை நிறுத்துங்கள். நாயகனுடன் டூயட் பாடவும், ஒரு நாயகனுக்கு ஐந்து கதாநாயகிகள், நாயகிகள் பற்றி இரட்டை அர்த்த வசனங்கள் போன்றவற்றை தவிருங்கள்.
சினிமாவில் நீங்கள் உருவாக்கும் ஒவ்வொன்றையும் இன்றை இளைய தலைமுறையினர் பின்பற்றுகின்றனர். பெண்களை போதைப் பொருட்களாக காட்டாதீர்கள் என இயக்குநர்களை கேட்டு கொள்வதாகவும் கூறியுள்ளார்.
