Tamil Cinema News | சினிமா செய்திகள்
கில்லி படத்தில் நடித்த விஜய் அம்மாவுக்கு இவ்வளவு அழகான மகளா? வைரலாகும் புகைப்படம்
விஜய்யின் அம்மா என்று சொன்னால் ஷோபா சந்திரசேகர் ஞாபகத்திற்கு வருகிறாரோ இல்லையோ, கில்லி படத்தில் நடித்த ஜானகி சபேஷ் என்பவர் வந்துவிடுவார். குறும்புத்தனம் பண்ணும் விஜய்க்கு சுட்டித்தனமான அம்மாவாகவும், அவருக்கு சப்போர்ட் செய்வதிலும் வாழ்ந்து காட்டியிருப்பார்.
கில்லி படத்தின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இதனைத் தொடர்ந்து வல்லவன் படத்திலும் இவரது கேரக்டர் ரசிக்கும்படி அமைந்திருக்கும். இன்னசென்ட் என்று சொல்லப்படும் வெகுளித்தனமான கேரக்டருக்கு அப்படியே 100% பொருந்துபவர்.
சமீபகாலமாக இவரை அதிக திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. இருந்தும் சமீபத்தில் ஒரு விழாவிற்கு தன்னுடைய அழகான மகளை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அவரின் பெயர் தவானி சபேஷ்.

dhavani-sabesh
இதனை பார்த்த நெட்டிசன்கள், நீங்களே அக்கா மாதிரி இருக்கீங்க, உங்களுக்கு பெரிய மகளா என கிண்டல் செய்து வருகின்றனர். இருந்தும் அவரது மகளை வச்ச கண் வாங்காமல் பார்த்து வருகின்றனர் நம் இணையதள வாசிகள்.
