Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே ஒரு நாள் உல்லாசமாக இருக்க கூப்பிட்ட பிரபல நடிகர்.. விஜய் நடிகை சொன்ன பகீர் சம்பவம்
தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் மீடூ புகார் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போதுதான் கொஞ்சம் அடங்கியிருந்த நிலையில் விஜய் பட நடிகை வெளியிட்ட தகவலால் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
நெஞ்சினிலே, ஜோடி, நரசிம்மா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை இஷா கோபிகர். தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய இஷா, தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
இந்நிலையில் தானும் மீடூவில் பாதிக்கப்பட்டதாக புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு இணையான நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைப்பதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் கேட்டு வந்ததாக தெரிவித்தார்.
மேலும் அவரை கண்டபடி திட்டி அனுப்பியதால் தனக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்க விடாமல் செய்தார் என கவலையுடன் கூறினார். தற்போது அனைவரிடத்திலும் யார் அந்த சூப்பர் ஸ்டார் நடிகர் என்ற கேள்வி எழுந்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
