சூர்யா-விக்னேஷ் சிவன் படத்தின் இணைந்த விஐபி நடிகை !

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகை சுரபி ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷின் வேலையில்லா பட்டதாரி’ படம் உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ‘விஐபி’ படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணன் இந்த படத்தில் சூர்யாவின் அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது இன்னொரு ‘விஐபி’ பட நடிகையும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

More Cinema News: