மிஷ்கின் இயக்கத்துல Arrol Corelli இசையமைப்புல விஷால், பிரசன்னா, வினை, சிம்ரன், தேவயாணி, அனு இமானுவேல், ஆண்ட்ரியா, பாக்யராஜ், ஜெயப்ரகாஷ் இவர்கள் நடித்துக்கொண்டிருக்கும் படம் துப்பறிவாளன்.

இந்த படத்துல பணியாற்றும் ஒவ்வொருவரும் ஒருத்தரை பற்றி ஒருத்தர் புகழ்ந்துகிட்டே இருக்காங்க. ஏற்கனவே மிஸ்கின் வந்து விஷால் மாதிரி ஒரு நடிகரை பார்த்ததே இல்லை, இதுவரை நான் இயக்கியதிலேயே சிறந்த நடிகர் விஷால்தான்னு சொன்னார்.

விஷால் வந்து நான் கனவுக்கன்னியா ஒரு காலத்துல நினைச்சுட்டு இருந்த சிம்ரன், என் பக்கத்துல நின்னு நடிக்கும்போதுதான் நடிப்பை பற்றி மேலும் பல விஷங்களை தெரிஞ்சுக்கிடேன்னு சொன்னாரு.

இப்போ இந்த படத்தோட ஹீரோயின் அனு இமானுவேல் என்ன சொல்லிருகாங்கன்னா

Anu Emmanuel“இந்த படத்துல நான் பிக் பாகெட் அடிக்கும் திருடி கதாபத்திரத்தில் நடிக்கிறேன், அதற்கான காட்சியில் இயக்குனர் மிஷ்கின் எனக்கு பிக் பாகெட் அடிக்க கற்றுக்கொடுத்தார். அதுவும் எப்படி படப்பிடிப்பில் பணிபுரியும் நபர்களில் யாரவது ஒருவர் பர்சை அவருக்கு தெரியாமல் பிக் பக்கெட் அடிக்க வேண்டும் என்று சொல்லி அதை அவரே செய்தும் காட்டினார்.

ஒரு சின்ன விஷயத்தில் கூட இவ்வளவு கவனம் எடுத்து கற்றுக்கொடுக்கும் மிஷ்கின் போன்ற இயக்குனரிடம் வேலை செய்வது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.” என்று பாராட்டியுள்ளார்

சினிமா பேட்டை: எப்படியும் காலை மட்டும்தான் காட்டப்போறாரு. அப்புறம் இவுங்க பிக் பாக்கெட் அடிச்சா என்ன? பிக் பாஸ்ல நடிச்சா என்ன?