சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஒருசில காட்சிகளில் வந்தாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ராதிகா ஆப்தே. இவருடைய நடிப்பிற்கு குறிப்பாக 25 வருடங்கள் கழித்து ரஜினியை சந்திக்கும் காட்சிக்கு பெரும் பாராட்டு கிடைத்தது.

இவர் ஏற்கனவே பிரகாஷ்ராஜின் ‘தோனி’ மற்றும் கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் நடித்தவர் என்பது அறிந்ததே.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்க ராதிகா ஆப்தே ஒப்பந்தம் ஆகியுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.