பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஜூலி செய்த தில்லு முள்ளும் அது போட்டு உடைந்த கதையும் உங்க எல்லார்க்கும் தெரிஞ்சிருக்கும்.

இன்னைக்கு என்ன பிக் பாஸ்ல நடந்துச்சுன்னா ஜூலி திரும்ப திரும்ப ஓவியா பேசியதை கமல் சார் மறைச்சுட்டார், அந்த வீடியோ footage பார்த்தால் அனைவரும் என்னை நம்புவீர்கள், நான் குற்றமற்றவள், நிரபராதி, கறைபடியா கரம் இப்டி எல்லார்கிட்டயும் புலம்பி தள்ளிட்டு இருந்தாங்க…(படிக்கிற உங்களுக்கே கடுப்பா இருக்குள்ள?)

இதை கேள்விப்பட்டு நம்ம ஒன்வுமன் ஆர்மி ஓவியா ஜூலியிடம் “திரும்ப திரும்ப பொய் பேசி எல்லாரையும் ஏமாத்த பார்க்காத, அப்படி ஒரு வீடியோ footage இல்லவே இல்லை. நீ திரும்ப திரும்ப பொய் சொல்றதால உன்னோட மதிப்பை நீயே கெடுத்துக்குற…. இப்படியே நீ வெளிய போனால் மக்கள் உன் மூஞ்சில காரித்துப்புவாங்க…” என்று கோவமாய் சொன்னார்…

இது குறித்து நீதி தேவதை காயத்ரியிடம் ஜூலி புகார் செய்ய முயன்றபோது “இந்த வத்தி வைக்கிற வேலைய இனிமேல செய்யாத” என்று அவரும் ஜூலியை மூக்குடைத்தார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: இதெல்லாம் நம்பலாமா வேணாமா ஆண்டவா