Connect with us

Cinemapettai

ileana

Cinema News | சினிமா செய்திகள்

காதல் தோல்வியால் விரக்தி.. இலியானா எடுத்த அதிரடி முடிவு

ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களை ஆட்சி செய்தவர் இலியானா. இவர் மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி படம் மூலம் அறிமுகமான இவர், பிறகு கேடி என்ற படத்தின் மூலம் தமிழில் கால்பதித்தார்.

பிறகு வழக்கம் போலத்தான், தெற்கிலிருந்து வடக்கு செல்லும் நாயகிகள் அங்கேயே டேரா போட்டு விடுவார்கள். அதே கதைதான் இலியானாவுக்கும். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த போட்டோகிராஃபர் ஒருவருடன் காதல் வயப்பட்டு மும்பைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் அடிக்கடி பறந்து வந்தார்.

பழையபடி நடிகையின் காதல் தோல்வியில் முடிய, மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு போட்டோ ஷூட் வந்த இலியானா படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார்.

மேலும் அவரிடம் காதல் பற்றி கேட்டபோது, இனி வாழ்க்கையில் யாரையும் நம்புவதாக இல்லை என்றும், காதல் என்ற ஒன்று இனி என் மனதில் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் நேர்பட பேசியுள்ளார். நம்பி நம்பி ஏமாந்தது போதும் என சோகமான முகத்துடன் பேட்டியளித்து சென்றார் இலியானா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top