Connect with us
Cinemapettai

Cinemapettai

actress-hero-gilma-gossip

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

பிரபல நடிகருக்கு வலைவீசும் நடிகை.. ஏற்கனவே பெயர் கெட்டது பத்தாதா என ஒதுக்கிய நடிகர்

தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கள் ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் தற்போது இந்தியா முழுவதும் பிரபல நாயகனாக வலம் வரும் தமிழ் நடிகர் ஒருவருக்கும் மலையாள நடிகை ஒருவருக்கும் கிசு கிசு என கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டு வருகின்றன.

தமிழ் சினிமாவில் நடிப்பின் நாயகனாக வலம் வரும் அந்த நடிகரின் சூப்பர் ஹிட் படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்தவர் அந்த நடிகை. முதல்படமே சூப்பர் ஹிட் என்பதால் அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்தார்.

அந்த நடிகை ஏற்கனவே ஒரு இயக்குனரை திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் வாழ்ந்து விட்டு பின்னர் பிடிக்கவில்லை என விவாகரத்து செய்துவிட்டார். அதற்கு முழுக்க முழுக்க காரணம் இந்த நடிகர் தான் என அந்த குடும்பமே பழி போட்டது.

அந்த நடிகர் அந்த சமயத்தில் சில படங்களை தயாரித்தும் வந்தார். அப்படி அந்த நடிகர் தயாரித்த ஒரு படத்தில் நடிக்கும் போதுதான் அவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகமானதாக பல கிசுகிசுக்கள் வெளிவந்தது.

அதை அவ்வப்போது படங்களிலும் பார்க்க முடிந்தது. விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த நடிகைக்கு பெரிய அளவு வாய்ப்பு இல்லை. ஓரளவு நடிக்கத் தெரிந்த நடிகையாக இருந்தாலும் அவரது கேரக்டர் அநியாயத்துக்கு தமிழ் சினிமாவில் கெட்டு விட்டது.

இதனால் தன்னுடைய சொந்த மொழியான மலையாள சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புக்காக அவ்வப்போது அநியாயத்துக்கு அரைகுறை ஆடையில் அலைந்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் அந்த நடிகரிடம் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு தாருங்கள் என கேட்டுள்ளார். உனக்கு நல்லது பண்ண போய் எனக்கு உன் குடும்பமே வெச்ச பேரு பத்தாதா என டென்சனாகி விட்டாராம் அந்த நடிகர்.

ஒரு காலத்தில் ஒட்டி உரசி வந்த அந்த நடிகர் தற்போது கிட்ட கூட அந்த நடிகையை சேர்த்துக் கொள்வது இல்லையாம். சமீபகாலமாக நடிகரின் படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதால் பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என நண்பர்கள் வட்டாரங்களில் கூறியுள்ளனர்.

Continue Reading
To Top