Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
என்ன ஒரு தொடை பெருசா இருக்கு, இன்னொன்னு சின்னதா இருக்கு.. கிராபிக்ஸ் பஞ்சாயத்தில் சிக்கிய பிரபல நடிகை
வெள்ளைத் தோலுடன் தமிழ் சினிமாவுக்கு யார் வந்தாலும் அவர்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிடும்.
அப்படி மருமகன் நடிகரின் படத்தில் அறிமுகமாகி, ஆரம்பத்திலேயே எக்கச்சக்கமான ரசிகர்களை உருவாக்கினார். ஆனால் அதன்பிறகு தமிழில் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
தெலுங்கு பக்கமும் அவரை ஏற்றுக் கொள்ளாததால் தற்போது பாலிவுட் பக்கம் சென்று விட்டாராம் அந்த வெள்ளை நடிகை.
இது ஒருபுறமிருக்க சமீப காலமாக அந்த நடிகை, கமர்சியல் படங்களில் இருந்து ஒதுங்கி மொத்தமாக கதாநாயகிகளை மையப்படுத்தி எடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அப்படித்தான் சமீபத்தில் ஒரு விளையாட்டு வீராங்கனை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அந்த நடிகை. அந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
அந்த படத்திற்கு முன்னரே அந்த கதாபாத்திரத்திற்காக பிரபல நடிகை கடுமையாக உடற்பயிற்சி செய்வதை போன்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டார்கள்.
இந்நிலையில் படத்தின் போஸ்டர் வெளியான உடன் பல கேலி கிண்டல்களுக்கு ஆகிவிட்டாராம் அந்த நடிகை. அந்த போஸ்டரில் கிராஃபிக்ஸ் சரியில்லாததால் மாட்டிக் கொண்டுள்ளார்.
விளையாட்டு வீராங்கனையாக நடிக்கும் அந்த போஸ்டரில் நடிகையின் ஒரு தொடை உடற்பயிற்சி செய்திருப்பது போன்றும், இன்னொரு தொடை சாதாரணது போன்றும் காட்சி அளித்துள்ளது. இதனால் டென்ஷனான ரசிகர்கள் இதுலயும் பித்தலாட்டமா என அந்த நடிகையை கிழித்தெறிந்து வருகிறார்களாம்.
