Tamil Cinema News | சினிமா செய்திகள்
பட வாய்ப்பு தருகிறேன் என்று என்னை முழுவதும் பயன்படுத்தினார்.. பிரபல நடிகை
மும்பையில் பிறந்து, மாடலிங் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் தான் மீரா வாசுதேவன். இவர் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
தமிழில் உன்னை சரணடைந்தேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான மீரா வாசுதேவன் பின்பு ஜெர்ரி, கத்தி கப்பல், ஆட்டநாயகன் கடைசியாக அவர் தமிழில் நடித்த படம் அடங்க மறு.
மீரா வாசுதேவன் விஷால் என்ற பிரபல ஒளிப்பதிவாளர் மகனை 2005ம் ஆண்டு திருமணம் செய்து பின்பு விவாகரத்து செய்து கொண்டார். மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மீரா அவருடனும் ஏற்பட்ட மன கசப்பால் இரண்டாம் விவாகரத்து செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு தற்போது மலையாளத்தில் ஒரு சில வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். ஆனால் தமிழில் எந்த ஒரு வாய்ப்பும் இல்லையாம். அதுமட்டுமல்லாமல் இவரது மேனேஜர் தனக்கு வரும் வாய்ப்புகளை மற்ற நடிகைகளுக்கு கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணம் தனக்குள் இருக்கும் மொழி தான் பிரச்சினை என்று தெரிவித்துள்ளார். இதனால் பல பட வாய்ப்புகளை தான் இழந்து விட்டதாகவும் தன்னை சுயலாபத்திற்காக பயன்படுத்தி கொண்டார் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

adanka-maaru
இதனால் கோலிவுட் வட்டாரங்களில் இருக்கும் நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
