Tamil Cinema News | சினிமா செய்திகள்
படுக்கைக்கு வந்தா படம்.. ஹிட் கொடுத்ததால் துரத்தும் தயாரிப்பாளர்கள்
சினிமா வாய்ப்புக்காக படுக்கை வரை செல்லும் கலாச்சாரம் தற்போது அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்த மொழியாக இருந்தாலும் இந்த ஒரு விஷயம் மட்டும் பொதுவாக இருக்கும். அந்த வகையில் மாட்டிக் கொண்டு முன்னேற முடியாமல் தவித்தவர்தான் அந்த வெற்றிப்பட நாயகி.
பிரபலமான மேல்மருவத்தூர் கோவில் பெயரில் உருவான படத்தின் நாயகி தான் அவர். நல்ல அழகு, சினிமாவுக்கு ஏற்ற உடல் அமைப்பு என மொத்தமும் பொருந்திய அழகி தான். சினிமாவில் பொதுவாகவே கவர்ச்சி தூக்கலாக இருக்கும்.
அது சினிமாவில் மட்டும்தான் என நம்பி ஏமாந்து விட்டாராம் நாயகி. அந்த படத்திற்கு பிறகு ஏராளமான வாய்ப்புகள் வந்து குவிந்ததாம். கூடவே ஹோட்டலில் புக் பண்ணப்பட்ட ரூம் விலாசமும் கூடவே வந்ததாம்.
இருந்தும் தன் திறமையால் தான் சினிமாவில் ஜெயிப்பேன் எனக் கூறி விட்டு தற்போது வீட்டில் முடங்கிவிட்டாராம். அட்ஜஸ்ட் செய்யவும் மாட்டாராம், கம்பெனியும் கொடுக்க மாட்டாராம், பின்னர் நம்ம எப்படி வாய்ப்பு கொடுக்கிறது என தயாரிப்பாளர் சங்கமே ஓரம் கட்டி விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
