Tamil Cinema News | சினிமா செய்திகள்
புகழ் போதையில் கணவனை பிரிந்த வால் நடிகை.. மாமனை நினைத்து மதுவுக்கு அடிமையான கதை
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஒரு உலுக்குஉலுக்கி போட்டவர் அந்த அரசியலும் இனிப்பும் பெயருடன் இணைந்த நடிகை. ஆங்கிலத்தில் வெற்றி என்ற சொல்லின் பெயரில் வெளிவந்த தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி பதித்தவர். அறிமுகமானது என்னவோ அக்கடதேசம் என்றாலும் அரவணைத்துக் கொண்டது என்னவோ தமிழ் சினிமாதான்.
அதன்பிறகு அன்பை கொண்டேன் என்ற படத்தில் திவ்யமான கேரக்டரில் நடித்து அப்ளாஸ் அள்ளி இருப்பார். அதனைத் தொடர்ந்து கிறிஸ்டியன் பொண்ணாக வம்பு நடிகருடன் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பெயர் பரவியது.
அதன்பிறகு தொட்டதெல்லாம் தூள்தான். அடுத்தடுத்து ஒரே இயக்குனரின் படத்தில் நடித்த அந்த நடிகை, ஒரு கட்டத்தில் அவர் மீது காதல் வந்து அந்த இயக்குனரையே திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன்பிறகு பட வாய்ப்புகள் குறைய, அவரை வேண்டுமென்றே விவாகரத்து செய்துவிட்டு, படங்களில் நடிக்க முடிவெடுத்தார்.
ஆனால் அதை அப்படியே அவருக்கு உல்டாவாகிவிட்டது. பட வாய்ப்புகளும் வரவில்லை, அதே நேரம் இயக்குனரும் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார். இதனால் தற்போது நொந்து நூலாகி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். இடையில் கருத்து காமெடியுடன் ஹீரோயினாக நடித்தும் இழந்த மார்க்கெட்டை திரும்ப பெற முடியவில்லை.
வயதும் ஆகி விட்டதால் யாரும் அவரின் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை. ஒரு காலத்தில் அவர் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் தற்போது நடிகையை சீண்டுவது இல்லையாம். இதனால் ஏக்கத்தில் இளைத்துவிட்டாராம். பேசாம அந்த இயக்குனரிடமே குப்பை கொட்டி இருக்கலாம் என அட்வைஸ் செய்கிறார்களாம் பிளான் பண்ணி கூட்டி வந்தவர்கள்.
