சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை காயத்ரி. இவர் இந்தியில் ஒளிபரப்பான ஓம் நமச்சிவாயா தொடரில் பார்வதி கேரக்டரில் நடித்துள்ளார்.தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடரில் கல்பனா கேரக்டரில் நடித்து வருகிறார்.
இப்போது எத்தனை கதாபாத்திரங்களில் நடித்தாலும் மெட்டி ஒலி சீரியலில் சரோ எனும் கேரக்டரே இவரை ரசிகர்களிடம் அதிக பிரபலம் ஆக்கியது. காயத்ரி சீரியலை தவிர ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் அஜித் மற்றும் விஜய் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே திரைப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இவர் நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து தற்போது காயத்ரி சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் மெட்டி ஒலி சீரியலில் தன்னுடைய கடைசி தங்கையாக பவானி கேரக்டரில் நடித்த நடிகை ரேவதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். மெட்டி ஒலி சீரியல் முடிவடைந்து பல வருடங்கள் ஆன பின்பும் அதில் அக்கா தங்கையாக நடித்த நடிகைகள் அனைவரும் இன்றும் அதே பாசத்துடன் இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் மெட்டி ஒலியில் காயத்ரியின் தங்கையாக நடித்த நடிகை உமா மகேஸ்வரி மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவருடைய இறப்பிற்கு காயத்ரி உட்பட மெட்டி ஒலியில் நடித்த நடிகர்கள் அனைவரும் வந்து தங்கள் இரங்கலை தெரிவித்தனர். மும்பையை பூர்வீகமாக கொண்ட காயத்ரி தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.
