Tamil Nadu | தமிழ் நாடு
சுர்ஜித் இறந்ததற்கு அவனுடைய அம்மா தான் காரணம்.. பரபரப்பைக் கிளப்பிய பிக்பாஸ் பிரபலம்
சமீபகாலமாக குழந்தைகள் ஆழ்துளை கிணறுகளில் விழுந்து உயிரை விடுவது தொடர்கதையாகி வருகிறது. அதேபோல் சமீபத்தில் திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி எனும் கிராமத்தில் சுர்ஜித் என்ற பையன் ஒருவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரை விட்டது தமிழகம் எங்கும் சோகத்தை நிரம்பியது.
தீபாவளி பண்டிகையை கூட மறந்து விட்டு அந்தப் பையன் பிழைப்பதற்காக பல இடங்களில் பூஜைகளும், கடவுள் பிரார்த்தனைகளும் நடந்து வந்தன. ஆனால் அவை எதுவும் கைகொடுக்காத நிலையில் நேற்று அதிகாலை அவனது சடலம் மீட்கப்பட்டது.
இதற்கு பிக்பாஸ் நாயகி காயத்ரி ரகுமான், அவன் தாயினால் தான் அவன் உயிரை விட்டான் என பரபரப்பை கிளப்பி விட்டார். ஏன் என்று கேட்டபோது, இந்த சம்பவம் பல நாட்களாக தொடர்ந்து வருகிறது. மேலும் இத்தகைய விபத்தில் சிக்கும் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக போதிய கருவி வசதிகள் இல்லாதது பெரும் வேதனையாக உள்ளது.
மேலும் அவனது பெற்றோர்களின் அலட்சியப் போக்கினால் இத்தகைய விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சிலர் எதிர்க்கவும் செய்கின்றனர். எந்த சமயத்தில் என்ன பேச வேண்டும் என்பதே தெரியாமல் பேசாதீர்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

gayathri-raguram
