25 ஆண்டு கால உறவை முறித்துக் கொண்ட கௌதமி.. வெளியே தெரியாமல் மறைக்கப்பட்ட காரணம்

Actress Gauthami: நடிகை கௌதமி எண்பது மற்றும் 90களின் காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய கௌதமி விவாகரத்திற்கு பிறகு அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட இவர் தற்போது பல கோடி பேர்களுக்கு அந்த நோயை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

நடிகை கௌதமி மற்றும் கமலஹாசன் இருவரும் திருமணம் செய்யாமல் கணவன் மனைவியாக வாழ்ந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். தன் மகளின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பை கருதி கமலை விட்டு பிரிவதாக கௌதமி அறிவித்தார். தற்போது அவர் தன்னுடைய மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் 25 ஆண்டு காலமாக பாஜக கட்சியில் உறுப்பினராக இருந்தார்.

கௌதமி இன்று பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். மேலும் அந்தக் கட்சிக்காக கடினமாக உழைத்த தனக்கு மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். கௌதமி அந்த கட்சியிலிருந்து விலகியதற்கு என்ன காரணமாக இருக்கும் என அனைவருக்கும் கேள்வி இருந்த நேரத்தில் அவர் அதற்கான பதிலையும் சொல்லி இருக்கிறார்.

நடிகை கௌதமியின் விவாகரத்திற்கு பிறகு தனிமையில் இருந்த அவருக்கு பாஜக நிர்வாகியான சி அழகப்பன் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். அவரையும் அவருடைய குடும்பத்தையும் கௌதமி ரொம்பவே நம்பி தன்னுடைய சொத்துக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் கொடுத்திருக்கிறார். சுமார் 25 கோடி மதிப்பிலான நிலம் ஒன்றை வாங்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்த பொழுது அவர் தன்னுடைய மனைவி பெயரையும் சேர்த்து அந்த பத்திரத்தில் எழுதி மோசடி செய்திருக்கிறார்.

கௌதமி இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பின் அழகப்பன் 40 நாட்களாக தலைமறைவாக இருக்கிறாராம். மேலும் பாஜக கட்சியை சேர்ந்த அத்தனை பேரும் அழகப்பனுக்குத்தான் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனால் கௌதமி ரொம்பவே மன உளைச்சல் அடைந்து இருக்கிறார். இத்தனை காலம் எந்த கட்சிக்காக உழைத்தோமோ அந்த கட்சி தனக்காக நிற்கவில்லை என்பதால் தற்போது விலகி இருக்கிறார்.

மேலும் தமிழக முதல்வர் மீது தனக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகவும் கௌதமி சொல்லி இருக்கிறார் இந்த மோசடி வழக்கில் தனக்கு நியாயம் கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார். இதன் மூலம் அடுத்து கௌதமி திமுக கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி சரியான விவரம் இனி வரும் நாட்களில் தான் தெரியும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்