Connect with us

Cinemapettai

நடிகை கவுதமியின் முதல் கணவரை பார்த்ததுண்டா? தற்போது வைரலாகும் புகைப்படம்

gautami

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகை கவுதமியின் முதல் கணவரை பார்த்ததுண்டா? தற்போது வைரலாகும் புகைப்படம்

1983 ஆம் ஆண்டு வெளிவந்த வசந்தமே வருக என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்குள் நுழைந்தவர் நடிகை கவுதமி. பிறகு 1987 ஆம் ஆண்டு தெலுங்கு படமொன்றில் கதாநாயகியாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் முதன்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபு நடித்த குருசிஷ்யன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை வென்று விட்ட கௌதமி, தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சிறந்த நடிகையாக விளங்கினார். ஒரு கட்டத்திற்கு பிறகு சந்தீப் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

ஆனால் சில வருடங்களிலேயே திருமண வாழ்க்கை கசந்து விட உடனடியாக விவாகரத்து பெற்றுக்கொண்டு தனது மகளுடன் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். பிறகு சினிமா வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் சின்னத்திரையில் கவனம் செலுத்தினார்.

அந்த வகையில் சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் என கிடைத்த வாய்ப்புகளில் பணியாற்றி வந்தார். பிறகு நோயினால் பாதிக்கப்பட்ட கவுதமியை கமல்ஹாசன் அரவணைத்துக் கொண்டார்.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேல் திருமணம் ஆகாமல் வாழ்ந்து கொண்டிருந்த இருவரும் சமீபத்தில் பிரிந்தனர்.

கவுதமி தனது மகளின் வருங்காலத்திற்காக இந்த முடிவை எடுத்ததாகவும் விளக்கம் கூறியிருந்தார். தற்போது கௌதமி தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த புகைப்படத்தில் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

gautami-sandheep

gautami-sandheep

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top