Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
பிரபல நடிகரால் படப்பிடிப்பை விட்டு ஓட்டம் பிடித்த முன்னணி நடிகை.. அவரைப் பார்த்து அம்புட்டு பயமாம்!
படப்பிடிப்பில் பிரபல நடிகரை பார்த்து முன்னணி நடிகை ஒருவர் ஓட்டம் பிடித்த செய்தி தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
வருடத்திற்கு ஏகப்பட்ட படங்களில் நடித்து வருபவர் தான் அந்த நடிகர். பல்வேறு கஷ்டத்திற்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் தற்போது நடிக்கத் தெரிந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபலமான நடிகராகவும் வலம் வருகிறார். அவர் தற்போது வாரிசு நடிகை ஒருவருடன் சேர்ந்து ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் அந்த நடிகருடன் நடிக்க ஆசைப்பட்ட நடிகை தற்போது சில நாட்களாக அந்த நடிகரின் நடவடிக்கைகளைப் பார்த்து மிகவும் பயந்துபோய் கிடக்கிறாராம்.
ஏற்கனவே கொரானா தொற்று அதிகமாக உள்ள நிலையில் அந்த நடிகர் தன்னுடைய ரசிகர்களை எங்கு பார்த்தாலும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறாராம்.
பிறகு கை கூட கழுவாமல் அப்படியே அந்த நடிகையுடன் சூட்டிங் ஸ்பாட்டில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கிறாராம். இதனால் பயந்துபோன அந்த நடிகை உடனடியாக படப்பிடிப்பை காலி செய்து விட்டு ஓட்டம் பிடித்து விட்டாராம்.
இனிமேல் அந்த நடிகர் எந்த ஒரு ரசிகரையும் படப்பிடிப்பு தளத்தில் பார்க்காமல் இருந்தால் தான் படப்பிடிப்புக்கு வருவேன் என தெரிவித்து விட்டாராம் அந்த வாரிசு நடிகை.
