kriti-sanon

பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோன் 2000 ரூபாய் நோட்டுகளால் ஆன உடை அணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. மகேஷ் பாபுவின் நே ஒக்கடினே படம் மூலம் நடிகையானார் க்ரிட்டி சனோன். தற்போது அவர் பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். ஷாருக்கானின் தில்வாலே படத்தில் நடித்தவர்.

இந்நிலையில் க்ரிட்டி சர்ச்சை ஒன்றில் சிக்கினார்.

கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து வைத்தார்.

ஏடிஎம்களில் வரிசையில் நின்று பணம் எடுப்பதற்குள் அவரவருக்கு கண்ணை கட்டிக் கொண்டு வருகிறது. இந்நிலையில் க்ரிட்டி 2000 ரூபாய் நோட்டுகளால் ஆன உடை அணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

ரூபாய் நோட்டிலா உடை அணிவது என்று அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் ஆளாளுக்கு க்ரிட்டி சனோனை சமூக வலைதளங்களில் வசை பாடத் துவங்கினர்.