கொடூரமாய் வாழ்க்கையில் மரணித்த 4 நடிகைகள்.. இன்று வரை மர்மங்கள் நீங்காத மரணம்

நாம் திரையில் பார்த்து பார்த்து ரசித்த பல பிரபலங்கள் உயிர் இழக்கும் போது அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை பற்றி ஒரு வாரமாவது மனதில் போட்டு குழப்பிக் கொண்டு இருப்போம். அப்படி இருக்கையில் நாம் திரையில் கண்டு ரசித்த நடிகர்கள் மிகவும் கொடூரமான முறையில் இறந்துவிட்டனர் என்று அறிந்தால் நிச்சயம் அது நம் மனதை பாதிக்கும். அப்படி மிகக் கொடூரமான முறையில் தன் உயிரை விட்ட சில நடிகைகளைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

சௌந்தர்யா: அப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக படையப்பா, சொக்கத்தங்கம், தவசி போன்ற படங்களில் நடித்திருந்த சௌந்தர்யா மிக அழகாகவும் நேர்த்தியாகவும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவர் ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் பயணித்தபோது ஹெலிகாப்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இவரின் இழப்பு தமிழ் திரை உலகத்தினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் இறந்த போது இவருக்கு வயது 31 ஆக இருந்தது.

மோனால்: நடிகை சிம்ரனின் தங்கையாகவும் தமிழ் சினிமாவில் பத்ரி, பார்வை ஒன்றே போதும், சார்லி சாப்ளின் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் நடிகை மோனால். இவர் திரைத் துறையில் கால் பதித்த பிறகு ஒரு டான்ஸ் மாஸ்டரின் தம்பியை காதலித்து வந்திருக்கிறார். இவரின் காதலுக்கு அவரின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவிக்கவே மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். நல்ல நடிகையாக மார்க்கேட் வளர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். அவர் இறக்கும்போது அவருக்கு 23 வயதுதான் ஆகியிருந்தது.

பிரதியூஷா: தமிழ் சினிமாவில் சவுண்ட் பார்ட்டி, சூப்பர் குடும்பம் போன்ற படங்களில் நடித்தவர் பிரதியூஷா. இவர் சித்தார்த் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். அவரோடு திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்று தன் குடும்பத்தைக் கேட்கும்போது குடும்பம் அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை .

இதனால் மனமுடைந்து அவரும் அவரின் காதலரும் தற்கொலை செய்து கொண்டனர். இதில் அவரின் காதலர் மட்டும் பிழைத்துக் கொண்டார். அதன்பின் சமீபத்தில் அவரின் தாயார் அளித்த பேட்டியில் தனது மகள் குறித்து கூறும்போது, தன் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவரை கற்பழித்து கொலை செய்து விட்டனர் என்றும் கூறினார். இதனால் இன்று வரை இவரது மரணம் மர்மமாகவே இருக்கிறது.

சிந்து: இணைந்த கைகள் பிஸ்தா சாமி போட்ட முடிச்சு போன்ற பலப் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சிந்து. மேலும் இவர் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சய்யின் மூத்த சகோதரி நடிகை சிந்து நுரையீரலில் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு அந்த நோயில் இருந்து மீள முடியாமல் இறந்து விட்டார். இவர் இறக்கும் போது இவருக்கு வயது 33. குறைந்த படங்கள் நடித்திருந்தாலும் நல்ல நடிகை என்று பெயர் வாங்கி வந்த இவர் திடீரென இறந்து போனது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறு வயதிலேயே தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட நடிகைகள் தான் இந்த வரிசையில் அதிகமாக இருக்கின்றனர். அப்படி தன்னுடைய இருபத்து இரண்டாவது வயதில் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட நடிகை தான் நடிகை மயூரி.

தமிழ்சினிமாவில் 7ஜி ரெயின்போ காலனி, ஏய் போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்றவர்தான் இந்த மயூரி. இவர் கடந்த 2005ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான காரணம் இன்றுவரை தெரியாமல் மர்மமாகவே இருந்து வருகிறது.

Next Story

- Advertisement -