புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஒரே பாட்டில் கலெக்டரான தேவயானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?. அடேங்கப்பா! இப்படி ஒரு பண்ணை வீடா?

Devayani: நடிகை தேவயானி, பெயருக்கு ஏற்ற மாதிரி உண்மையிலேயே தேவதை போன்றவர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து வளர்ந்த தேவயானி, இப்போது தமிழ்நாட்டின் மருமகள். தேவயானி முதல் முதலில் நடித்த படம் தொட்டா சிணுங்கி.

அதன் பின்னர் அஜித் மற்றும் பிரசாந்த் நடித்திருந்த கல்லூரி வாசல் படத்திலும் நடித்தார். தேவயானிக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது காதல் கோட்டை தான். அதன் பின்னர் நிற்க நேரமின்றி தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார்.

தேவயானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அப்போதைய முன்னணி ஹீரோக்களில் ரஜினியை தவிர மற்ற எல்லோருடனும் சேர்ந்து நடித்து விட்டார். சூரிய வம்சம் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராஜகுமாரன் இயக்கத்தில் நீ வருவாய் என படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

அதன் பின்னர் வீட்டின் எதிர்ப்பை மீறி தேவையான தைரியமாக ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் தேவயானிக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது கோலங்கள் சீரியல் தான். தற்போது சினிமா மற்றும் சீரியல் என இரண்டிலுமே தடம் பதித்து கொண்டிருக்கிறார்.

தேவயானியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 15 கோடி ஆகும். அது மட்டுமில்லாமல் சென்னையில் ஒரு சொந்த பங்களா வீடும் இருக்கிறது.பென்ஸ், ஸ்கோடா என்று இரண்டு சொகுசு கார்களை வைத்திருக்கிறார். மேலும் அவருடைய சொந்த ஊரான அந்தியூரில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு இருக்கிறது.

இந்தப் பண்ணை முழுக்க கொய்யா மரங்கள், சந்தன மரங்கள், மாமரங்கள், தென்னை மரங்கள் இருக்கின்றன. மேலும் இந்த வீட்டில் ஐந்து பெட்ரூம்கள் இருக்கிறதாம். செயற்கையாக வீட்டிற்குள் மழை வருவதற்கும் இந்த வீட்டில் செட் பண்ணி வைத்திருக்கிறார்கள். கோடை காலத்தில் வீடு குளிர்ச்சியாக இருக்க இப்படி ஒரு ஐடியாவாம்.

- Advertisement -

Trending News