ஏம்மா, மொக்க படம் நடிச்சிட்டு 2 கோடி சம்பளம் கேக்குறியே, நியாயமா.. சுருட்டை முடி நடிகையின் அட்டகாசம்

actress
actress

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பலரும் லட்சங்களில் சம்பளம் வாங்கி கொண்டிருக்கையில் நடிச்ச படம் எல்லாம் தோல்வி பெற்ற நடிகை கோடிகளில் சம்பளம் கேட்பது தயாரிப்பாளர்களை அதிர வைத்துள்ளது.

மலையாள சினிமாவில் அறிமுகமாகி அங்கே மிகப் பெரிய புகழ்பெற்று தற்போது அக்கட தேசத்தில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் அந்த சுருட்டை முடி நடிகை. அம்மணிக்கு நம்ம ஊரு முகம் என்பதால் நம்ம ரசிகர்களிடையே நல்ல வரவேற்புள்ளது.

இருந்தாலும் அம்மணி நடித்த சில தமிழ் படங்கள் பிலோ ஆவரேஜ் படங்களாக இருந்ததால் தற்போது அக்கட தேசத்தில் மட்டும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். அக்கட தேசத்தில் அந்த நடிகை தற்போது 2 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தான் தமிழில் இருந்து சில பட வாய்ப்புகள் அவருக்கு சென்றுள்ளது. அக்கட தேசத்தில் போடும் அதே ரேட்டை தமிழ் சினிமாவுக்கும் போட்டுள்ளார் அந்த நடிகை. அந்த நடிகைக்கு பூர்வீகம் என்னமோ தமிழ்நாடு தான்.

ஆனால் பெயர் வாங்கி கொடுத்தது எல்லாம் பக்கத்து மாநிலங்கள். இவ்வளவு ஏன் விஜய் டிவி நடன நிகழ்ச்சியில் கூட அவர் கலந்து கொண்டுள்ளார். தமிழில் பெரிய அளவு வெற்றி கொடுக்காத அந்த நடிகை அக்கட தேசத்தில் கேட்கும் அதே சம்பளத்தை இங்கேயும் கேட்கிறாராம்.

நடிகர்களும் அந்த நடிகை தான் வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள். இந்த பக்கம் போனா சீவலு, அந்த பக்கம் போனா சிதறலு என நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

Advertisement Amazon Prime Banner