Connect with us
Cinemapettai

Cinemapettai

actress-chanceless-gossip

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

சத்தமில்லாமல் நடிகையை ஓரம்கட்டிய நிறுவனம்.. இளைஞர்களின் சூட்டை கிளப்ப ரெடியான பிரபல நடிகை!

சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் நடிகைகளை விட தற்போது சீரியலில் வாய்ப்பு கிடைக்க பல இளம் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். அதற்கு சமீபகாலமாக இளைஞர்களும் சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டது தான் காரணம்.

அந்த வகையில் பிரபல நம்பர்1 சேனலில் பிரபலமான சீரியலாக வலம் வருவது அந்த சீரியல் தான். அந்த சீரியல் இந்த நாயகி நடித்ததால் தான் பிரபலம் ஆனது. அந்த நாயகி சீரியலில் மட்டுமில்லாமல் படங்களிலும் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கதாநாயகியாக மட்டுமில்லாமல் பல குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் திறமையான நடிகர் ஒருவர் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் அந்த நாயகி.

அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் தற்போது கொரானா பாதிப்பால் பலரும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் சீரியல் ஷூட்டிங் நடத்தியே ஆவேன் என டிவிகள் உறுதியாக இருக்கின்றன.

இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் அந்த சீரியலில் நடிக்க வர முடியாது என்பதால் உடனடியாக ஆளை மாற்றி விட்டார்களாம். இதனால் இருந்த வாய்ப்பும் போச்சு என கவலையில் இருக்கிறாராம் அந்த நாயகி.

இனி பட வாய்ப்புகளுக்காக அதிரடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் அந்த நாயகி. இனி சூடு கிளப்பும் புகைப்படங்களை எதிர்பார்க்கலாம்.

Continue Reading
To Top