fbpx
Connect with us

Cinemapettai

வாய்ப்பில்லாமல் வயதான நடிகருக்கு ஜோடியான கேத்தரின் தெரசா.. பணம் பத்தும் செய்யும்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வாய்ப்பில்லாமல் வயதான நடிகருக்கு ஜோடியான கேத்தரின் தெரசா.. பணம் பத்தும் செய்யும்

சினிமாவில் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்றுதான் பல நடிகர், நடிகைகள் இருந்து வருகின்றனர். என்னதான் உச்சத்தில் இருந்தாலும் அவர்களைக் கீழே இறக்கிவிட ரசிகர்களுக்கு ரொம்ப நேரம் ஆகிவிடாது.

இதேபோல்தான் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் கேத்தரின் தெரசா. கமர்சியல் படத்திற்கு ஏற்ற நாயகியாக உருவாக்கப்பட்டவர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பெரும்பாலும் இரண்டாவது ஹீரோயினாகவே கவனிக்கபட்டவர்.

கவர்ச்சி நாயகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இருந்தும் முன்னணி நாயகியாக மாற முடியவில்லை. தற்போது தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவருடன் ஜோடி சேர பல நாயகிகள் பயப்படுவார்கள். காரணம் படப்பிடிப்பில் கோபமாக நடந்து கொள்பவர்.

இதனாலேயே பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த படத்துக்கு அதிக சம்பளம் கொடுத்தும் யாரும் நடிக்க முன்வரவில்லை. தற்போது பட வாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் கேத்தரின் தெரசா, ஒரு கோடி சம்பளம் பேசி பாலகிருஷ்ணா படத்தில் இணைந்துள்ளார்.

பணம் பத்தும் செய்யும் என்பதற்கு சான்றாக கிட்டத்தட்ட தாத்தா வயது இருக்கும் நடிகருடன் ஜோடி போட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது அவருக்கு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top