Tamil Cinema News | சினிமா செய்திகள்
யாராவது வாய்ப்பு கொடுங்க.. கேத்ரின் தெரசாவின் பிகினி போட்டோ சொல்லாமல் சொல்லும் கதை
நடிகை கேத்தரின் தெரசா தமிழ் சினிமாவில் கார்த்தி ஜோடியாக மெட்ராஸ் என்ற படத்தில் அறிமுகமானார். அறிமுகப் படத்தில் நல்ல நடிகை என்று பெயர் வாங்கிய கேத்தரின் தெரேசா, தொடர்ந்து அதே மாதிரியான கதைகளே அவரை தேடி வர திடீரென கவர்ச்சி கடலில் குதித்தார்.
கணிதன் மற்றும் கலகலப்பு 2 ஆகிய படங்களில் இதற்கு மேலும் காட்ட முடியாது என்பதை போல கவர்ச்சியை வாரி வழங்கி இருந்தார். அதன் விளைவு, கவர்ச்சிக்கு பெயர் போன தெலுங்கு சினிமா அவரை அழைத்துக் கொண்டு போனது.
எப்படியும் தெலுங்கு சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாநாயகிகள் தேவைப்பட மாட்டார்கள் என்பதால் கேத்ரின் தெரசாவை ஐட்டம் பாடலுக்கும், இரண்டாவது ஹீரோயின் போன்ற கதாபாத்திரங்களுக்கு பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் பிகினி உடையணிந்து போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மயில்பச்சை பிகினி உடைக்கு மேல் கோர்ட் ஒன்றைப் போட்டு கவர் செய்து கவர்ச்சி காட்டி உள்ள புகைப்படம் இணையதளங்களில் பெரிய ஹிட் அடித்துள்ளது.
இதன் மூலம் கவர்ச்சிக்கு என்னிடம் எந்த குறையுமில்லை என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்.

catherine
