நேற்று ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரிதும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. காரணம் இதில் காயத்ரி, நமீதா மற்றும் ஜூலி மூவரும் முழுமையாக வில்லி போல் நடந்து கொண்டனர்.

அவர்கள் ஓவியாவை நிம்மதியாக உறங்கவிடாமல் பாடாய் படுத்திய காட்சி அனைவரிடமும் கோவத்தை தூண்டியுள்ளது… இரு முறை எலிமினேஷனில் சிக்கியும் மக்கள் ஆதரவால் தப்பித்து கொண்ட ஓவியா மூன்றாம் முறையாக இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளார்…

இந்த முறை ஓவியாவை எப்படியாவது துரத்திவிடவேண்டும் என்று காயத்ரி மற்றும் நமீதா கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்.

இதன் உச்சமாக நேற்று ஜூலியையும் துணைக்கு வைத்துகொண்டு ஓவியாவை மனரீதியாக தூங்கவிடாமல் டார்ச்சர் செய்தனர்… இதனால் கோவமடைந்த ஓவியா ஜூலியை கெட்ட வார்த்தையால் திட்டினார்…

இதன் தொடர்ச்சியாக இன்று இரவு ஒளிபரப்ப உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னுரை காட்சியில் காயத்ரி மீண்டும் ஓவியாவை வம்பிலுக்க ஓவியா கோவம் கொண்டு கத்துவது போலவும் இடையில் வந்த ஷக்தி ஓவியாவை அறைந்துவிடுவேன் என்று மிரட்டுவது போலவும் ஓவியா துணிச்சலுடன் தைரியம் இருந்தால் அறையுங்கள் பாப்போம் என்றும், ஓவியாவை அறைய முற்படும் சக்தியை அனைவரும் தடுப்பது போலவும் காட்சிகள் காட்டப்பட்டன…

ஷக்தி அடித்தாரா? இந்த பிரச்சனையை கமல் எவ்வாறு அனுகப்போகிறார் என்பது இன்று இரவு தெரியவரும்…

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: யாருடா இந்த பொண்ணு எங்களுக்கே பார்க்கணும் போல இருக்கு… ஊரே உருண்டு வந்தாலும் ஊதி தள்ளிட்டு போய்டே இருக்காளே…