fbpx
Connect with us

Cinemapettai

காதலியை கழட்டி விட்டு வேறொரு நடிகையை திருமணம் செய்த நடிகர்.. போதையில் தள்ளாடும் நடிகை!

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema Kisu Kisu

காதலியை கழட்டி விட்டு வேறொரு நடிகையை திருமணம் செய்த நடிகர்.. போதையில் தள்ளாடும் நடிகை!

சினிமாவில் நெருங்கி நடிக்கும் போது காதலிப்பதும், பிறகு நெருக்கம் குறைந்ததும் காதலை முறித்துக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. அப்படித்தான் ஒரு இளம் நடிகர் மற்றும் நடிகையின் காதல் அமைந்துள்ளது.

கேரளத்து வரவான அந்த நடிகை சினிமாவில் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன்பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாததால் இரண்டாம் கட்ட நாயகியாக நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் சுத்தமாக பட வாய்ப்பு இல்லாத நேரத்தில் தான் கடவுள் கருணையால் அந்த நடிகைக்கு பெரிய முதலாளி நிகழ்ச்சி வாய்ப்பு கிடைத்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த நிகழ்ச்சியில் அந்த இளம் நடிகைக்கு அவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் உருவானது.

3 மாதத்தில் உருவான ரசிகர் கூட்டத்தை வெளிவந்த 3 நாட்களில் மொத்தத்தையும் கெடுத்துக் கொண்டார் அந்த நாயகி. ஒரு வெளங்காத படம் ஒன்று வெளியாகி நாயகியின் மார்க்கெட்டை பதம் பார்த்தது.

அந்தப் பெரிய முதலாளி வீட்டில் ஒரு இளம் நடிகரை காதலித்தார் அந்த நடிகை. வெளியில் வந்ததும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதும், ஊர் சுற்றுவதும் என பொழுதை கழித்து வந்தனர்.

இதற்கிடையில் அந்த நடிகர் இந்த நடிகையை கழட்டி விட்டுவிட்டு வேறு ஒரு இளம் நடிகையுடன் ஜோடி சேர்ந்து சமீபத்தில் திருமணத்தையும் நடத்தி முடித்துவிட்டார். திருமணத்திற்கு பெரிய முதலாளி வீட்டில் இருந்த அனைவரும் வந்திருந்தனர்.

ஆனால் அந்த நடிகையை மட்டும் காணவில்லை. விசாரித்த போது தான் தெரிந்தது, நடிகரின் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் அந்த நடிகை தற்போது குடிபோதைக்கு அடிமையாகி விட்டாராம்.

Continue Reading
To Top