பிந்து மாதவி ஒரு முன்னணி தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பொக்கிஷம் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

நடிகை பிந்து மாதவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய பிறகும் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், என்னை மட்டும் ஓரம் கட்டுகிறதே’ என நெருக்கமான சினிமா நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம் இந்த ஆந்திர அழகி.

bindu-madhavi

இவர் தமிழில் அறிமுகமான புதிதில், ‘அழகான கண்களுக்காகவே பிந்து மாதவியை நடிக்க வைக்கலாம்’ என கோலிவுட் ஹீரோக்கள் கூறியதால் பிந்துவும், கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கி விடலாம் என நினைத்திருந்தார்.

ஆனால், பிந்து மாதவி நடித்த படங்கள், அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால், கோலிவுட் திரையுலகம் அவரை ஓரம் கட்டியது. ‘ வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ போன்ற படங்களில், சிறிய வேடங்களில் நடித்தார் பிந்து.

bindu-madhavi

அதற்குப் பின், பிந்து மாதவிக்கு சிறிய வேடங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. சற்று இடைவெளிக்குப் பின், தற்போது, ‘பக்கா’ என்ற படம் மூலம், மீண்டும் ரீ- என்ட்ரி கொடுத்துள்ளார் பிந்து மாதவி.

ஆனால், பக்கா படத்தில் ஹீரோயின் பிந்து மாதவி அல்ல. இரண்டாவது ஹீரோயினாகத்தான் இதில் நடிக்கிறார் பிந்து. கிடைத்த வரைக்கும் லாபம் எனும் முடிவுக்கு, அவர் வந்துவிட்டார் போலிருக்கிறது.

bindu-madhavi

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கும் வெளியே வந்தபிறகு வாய்ப்புகள் குவிந்துவருகின்றன. ஒரு சிலரைத் தவிர, ஆரவ், ஹரிஷ், ரைசா, கணேஷ் ஆகியோர் படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளனர். ஜூலியும் டி.வி-யில் தொகுப்பாளராகிவிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே இதன் மூலம் நல்ல பட வாய்ப்புகள் வரும் என்கிற எண்ணத்தால் தான். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் வாய்ப்புகள் கிடைக்காத சோகத்தை பாவம் யாரிடம் சொல்வார் பிந்து?