Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
பிகினி போடுறேன், ஆனா அது வேண்டாமே.. கோடிகளுக்காக கட்டுப்பாட்டை விட்ட பிரபல அழகு நாயகி!
தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்கு போல இருக்கும் நடிகைகள் பலரும் மற்ற மொழிகளில் பாரபட்சம் பார்க்காமல் கவர்ச்சியை வாரி வழங்குவார்கள்.
ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்தும் தற்போது வரை கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்த நடிகை திடீரென பிகினி உடை போடுவதற்கு ஓகே சொல்லி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் வந்த வேகத்திலேயே மிகப் பெரிய நடிகையாக உருவெடுத்தவர் தான் அந்த கொழுக் மொழுக் நடிகை. முதலிரண்டு படங்களிலேயே தமிழ் சினிமாவின் டாப் நடிகருடன் ஜோடி போட்டு அசத்தினார்.
அதேபோல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துவந்தார். அந்த சமயத்தில் பாலிவுட் பட வாய்ப்பு கண்ணை பறிக்க உடனடியாக தமிழ் மற்றும் தெலுங்கு பட வாய்ப்புகளை உதறி தள்ளி விட்டு சென்றார்.
ஆனால் அவரது கெட்ட நேரமோ என்னமோ, பாலிவுட் படத்தில் இருந்து நாயகியை உதறித் தள்ளி விட்டார்கள். இதனால் பழைய குருடி கதவை திறடி என மீண்டும் தன்னுடைய ஆஸ்தான இயக்குனர்களுக்கு தூது விட்டு கொண்டிருக்கிறாராம்.
நடிகையிடம் எதை அதிகமாக ரசிகர்கள் பார்த்து ரசித்தார்களோ தற்போது அதையே இழந்துவிட்டு பரிதாபமாக காட்சி அளிக்கிறார். பிரபல நடிகையை பார்த்து ரசிகர்கள் கவிந்ததே அவருடைய கொழுக் மொழுக் தேகத்துக்காக தான்.
ஆனால் யார் பேச்சை கேட்டு உடல் எடையை குறைத்தாரோ. தற்போது ரசிகர்கள் அவரை ஏறெடுத்துக் கூட பார்ப்பதில்லை. ஆனால் ஒரு தயாரிப்பாளரின் பார்வை தொடர்ந்து அந்த நாயகியின் மீது இருந்து வருகிறது.
தற்போது அந்த நடிகை பாலிவுட்டில் ஒரு படத்தில் பிகினி உடையணிந்து நடிக்க ஓகே சொல்லி இருக்கிறாராம். பெரிய சம்பளம் என்பதால் ஒத்துக்கொண்டார் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஆனால் நடிகையின் கண்டிஷன் தான் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகினி போட்டு நடிக்கிறேன் ஆனால் படத்தை தமிழில் வெளியிட கூடாது என கட்டளைட்டாராம். இந்த காலத்தில் சமூக வலைதளங்கள் இருக்கும் வேலையிலும் இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை நாயகி எடுத்திருப்பது கஷ்டம் தான் என்கிறார்கள்.
இருந்தாலும் காஞ்ச மாடு கம்பில் புகுந்ததை போல அம்மணியை பிகினியில் பார்க்க ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கிறார்கள்.
