bhuvaneswari

ஆசிட் வீசுவேன்   என மருத்துவ மாணவிக்கு மிரட்டல் விடுத்த காரணத்தால்  நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

‘பாய்ஸ்’ ‘குண்டக்க மண்டக்க’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை புவனேஸ்வரி. சில வருடங்களுக்கு முன் விபச்சார வழக்கில் கைதாகியிருந்த இவர் தமிழ் பட  நடிகைகளை பற்றி சொன்ன விஷயம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

bhuvaneswari

புவனேஸ்வரி சென்னை வளசரவாக்கம் எழில் நகரில் தன் மகனுடன் வசித்து வருகிறார். இவர்  மகன் மிதுன் சீனிவாஸ் (வயது 23) காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கும், அண்ணாநகர் தென்றல் காலனியை சேர்ந்த அனு  என்ற பெண்ணுக்கும் ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண் கேளம்பாக்கத்தில் உள்ள  தனியார் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.  மிதுன் இந்தப் பெண்ணை முதன் முதலில் தான் படிக்கும் பள்ளியில் தான் பார்த்துள்ளார். சில வருடங்களுக்கு பின் தான் அவருக்கு பேஸ் புக்கில் அழைப்பு கொடுத்து நண்பர் ஆகியுள்ளார்.

அதிகம் படித்தவை:  விஜய் சேதுபதி வெளியிட்ட சந்தீப் கிஷன் நடிக்கும் ரொமான்டிக் ஹாரர் ‘கண்ணாடி’ பட பர்ஸ்ட் லுக்.
bhuvaneswari

நாளடைவில் இவர்களுடைய பழக்கம் மிகவும் நெருக்கமானது. பின்னர் மிதுன், அனுவிடம் தான் அவரை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் கேட்டுள்ளார்.

ஆனால் அனு அதனை ஏற்க மறுத்துவிட்டார். ஆனாலும் மிதுன், அனுவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். மேலும் இரண்டு மாதங்களுக்கு முன் அவரின் வீட்டின் அருகே பெட்ரோலை ஊற்றி எரித்துவிடுவேன் என மிரட்டல் விடுத்து  தகராறு செய்துள்ளார்

இதனால் அனு, ‘பேஸ்புக்கில்’ தனது நட்பு வட்டாரத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டார். இதில் கோபம் அடைந்த மிதுன், மீண்டும் அனுவின் வீட்டுக்கு சென்று வீட்டில் பொருத்தியிருந்த கேமராவை அடித்து நொறுக்கியுள்ளார்.

அப்போது மிதுன், அனுவிடம் ‘என்னை திருமணம் செய்துகொள்ளா விட்டால் உன் முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன்’ என மிரட்டியதாக தெரிகிறது. அதன்பின்னர் பலமுறை போனிலும் மிரட்டல் விடுத்து வந்தார்.

இது குறித்து அனு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பின் போலிஸ் சீனிவாசன் மீது கொலை மிரட்டல், ஆபத்தான பொருட்களை பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய வற்றின் கீழ் அவரை கைது செய்துள்ளது. Sections 354-B (assault or use of criminal force to woman with intent to disrobe), 448 (punishment for house trespass), 427 (mischief causing damage to the amount of fifty rupees), 506 (i) (criminal intimidation) of the Indian Penal Code (IPC) and Section 4 of Tamil Nadu Prohibition of Harassment of Women Act (penalty for harassment of women)

அதிகம் படித்தவை:  ஹாலிடேவுக்கு கிளம்பிய த்ரிஷா!

சீனிவாசன் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார்  தெரிவித்துள்ளனர்.

ஆதம்பாக்கத்தில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை, வாலிபர் தீவைத்து எரித்து கொலை செய்தார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.